யாழ்ப்பாணம் திரும்பும் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிந்துமயூரன் பிரியங்கா நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
குறித்த சிறுமியின் குடும்பமானது பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருந்தாலும் அவர் தனது திறமையால் இந்த பாடல் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு, அதில் பங்குபற்றி நடுவர்கள் உட்பட பலரது பாராட்டினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது