யாழ்.சாவகச்சோி நகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு, திருடனும் கைது!
சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது.
சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச் சென்ற ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டுச் சென்ற நிலையில் திரும்பிவந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர் சாவகச்சேரிப்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார் இதன்போது , விரைந்து செயற்பட்ட சாவகச்சேரிப் பொலிஸாரினால் பொலிஸ் நிலையங்களுக்கும் சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு , மன்னார் சோதனைச் சாவடியில் வைத்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளைத் திருடியவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.