ஐக்கிய சமாதான கூட்டமைப்புக் கட்சியின் அரசியல் பணிமனை திறப்பு விழா

ஐக்கிய சமாதான கூட்டமைப்புக் கட்சியின் அரசியல் பணிமனை திறப்பு விழா
ஐக்கிய சமாதான கூட்டமைப்புக் கட்சியின் சார்பாக காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் வண்ணாத்துப் பூச்சி சின்னத்தில் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் போட்டியிடும் இளம் ஆளுமை சமூக செயற்பாட்டாளர் ஆர்.எம். தானிஸ் ரஹ்மதுல்லாஹ்வின் தேர்தல் காரியாலய திறப்பு விழா மற்றும் மக்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை(18) மாலை நடைபெற்றது.
இதன்போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம். அகுவர் ஆகியோர் இணைந்து தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் 2025 ஆண்டிற்கான காரைதீவு பிரதேச சபைக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப்
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பானது கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ கொட்டிகாவத்தை புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி ஆனடுவ ஆராய்ச்சிகட்டு பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளியிலும் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பகுதியிலும் போட்டியிடுகின்றது.இத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எமது இளைஞர்கள் இறக்கியுள்ளனர்.இதனூடாக காரைதீவு பிரதேசசபையில் அதிகளவான ஆசனத்தை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும்.ஊழலற்ற ஆட்சி ஒன்றினை எமது கட்சி மேற்கொள்ளும்.
இந்த பிரதேசசபையின் ஊடாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.மாற்றம் என்பது எங்களை ஏமாற்றிவிடக் கூடாது.ஒரு மாற்றத்தில் வருகின்றவர்களின் பின்புலம் பலமானதாக இருக்க வேண்டும்.இத்தேர்தலில் ஊழலற்ற ஏமாற்றத்திற்கு எதிரான செயற்பாட்டை சரியாக செய்யக்கூடிய பொதுச்சேவைகளை செய்கின்ற இளைஞர்கள் முன்வந்து போட்டியிடுகின்றனர்.எதிர்காலத்தில் மாளிகைக்காடு மாவடிப்பள்ளி உள்ளிட்ட காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நலன் கருதி பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.இரு சமூகம் சார்ந்த பிரதேச சபையாக காரைதீவு பிரதேச சபை இருப்பதனால் எமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சி ஊடாக ஐக்கிய சமாதானத்தை ஏற்படுத்தி பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவோம் என்றார்.