SuperTopAds

என்னைப் பழிவாங்குவதற்காக திட்டமிட்டு இராணுவம் எனது வீட்டை உடைத்துள்ளது!

ஆசிரியர் - Editor II
என்னைப் பழிவாங்குவதற்காக திட்டமிட்டு இராணுவம் எனது வீட்டை உடைத்துள்ளது!

கேப்பாபிலவில் விடுவிக்கப்பட்ட காணியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இருந்த வீடு இராணுவத்தால் சுக்குநூறாக் கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டப்படு கிறது.

திட்டமிட்டு பழிவாங்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்று தமது காணிகளைத் திருப்பும் போராட்டத்தைக் கடந்த 300 நாள்களுக்கும் மேலாக முன்னெடுத்துச் செல்லும் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை தெரிவித்தார்.

இதேவேளை, விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தாம் அமைத்த 28 வீடுகள் மற்றும் கட்டடங்களைப் படையினர் மக்களிடம் கையளித்துள்ளனர்.

ஒப்படைக்கப்பட்ட காணிகளை அளவிடும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு சென்றிருந்த◌ார் வேலாயுதபிள்ளை. நிலமையை நேரில் பார்த்த பின்னர் அது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

காணியின் உரிமையாளர்கள் மட்டுமே படையினரால் ஏற்றிச்செல்லப்பட்டார்கள்.காணிகளில் படையினரால் அமைக்கப்பட்ட 28 கட்டடங்கள் உள்ளன.

சில காணிகளில் காணிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டடங்களும் காணப்படுகின்றன. ஆனால், ஏற்கனவே காணிகளில் இருந்த சிலரது வீடுகள் உடைக்கப்பட்டுள்ளன.என்னுடைய வீடும் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

5 மாதங்களுக்கு முன்னர் கேப்பாபிலவு ஆலய வழிப்பாட்டுக்குச் சென்ற போது முழுமையாக இருந்தது. அப்போதும் நாங்கள் காணிகளை விடுவிக்கக்கோரிப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தோம்.அதனால் என்னைப் பழிவாங்குவதற்காகத் திட்டமிட்டு எனது வீட்டை உடைத்துள்ளார்கள்.

காணி மீட்புப் போராட்டத்துக்கு நான் தலைமை தாங்குவதைப் பொறுக்க முடியாமலேயே இப்படிச் செய்துள்ளார்கள் என்றார்.

காணிகளைப் பார்க்க நேரில் சென்ற வேறு சிலரோ தமது காணிகளில் புதிய வீடுகள் இருப்பது தமக்குக் கிடைத்த அதிர்ஸ்டம் என்று கூறினார்கள்.‘

இராணுவம் அமைத்துள்ளவற்றில் பல வீடுகள் குடும்பங்கள் வாழ்வதற்கான வீடுகள் அல்ல. அவை மருத்துவமனைகள் அல்லது விடுதிகள் நடத்துவதற்குத்தான் சரியாக இருக்கும்.

அவற்றில் சில பல அறைகளைக் கொண்டுள்ளன. படை அதிகாரிகள் தங்கி வாழ்வதற்காகக் கட்டப்பட்டுள்ளன.

3 வீடுகள் மட்டுமே குடும்பங்கள் பயன்படுத்தத்தக்கனவாகக் காணப்படுகின்றன. இது எங்களுக்கு கிடைத்த அதிஸ்டம் என்று தான் சொல்ல வேண்டும்” என்றனர் அவர்கள்.<