வடகிழக்கில் 70 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் 70 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்..

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 மாகாணங்களில் நெல்சிப் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டங்கள் 70 மில்லியன் அமெரிக்க டொலரில் முன்னெடுப்பதற்கான திட்டத்திற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நிதிப் பங்களிப்பில் உலக வங்கியினால் வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா ஆகிய நான்கு மாகாணங்களிலும் தலா 17.5 மில்லியன் யு.எஸ் டொலர் நிதியில் அதாவது சுமார் 3 ஆயிரத்து 200 மில்லியன் ரூபா வீதம் நான்கு மாகாணங்களிலும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த திட்டம் தொடர்பில் நேற்றைய தினம் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் வாசிங்டன் பிரதிநிதிகளுடன், அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாகாண அலுவலர்கள் என முத்தரப்புச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன் பிரகாரம் ஏப்பிரல் மாதம்  இடம்பெறும் ஒப்பந்த்த்தின் பிரகாரம் 2019 மே மாதம் ஆரம்பிக்கும் திட்டங்கள் 2022 டிசம்பரில் முடிவுறுத்தப்படும். குறித்த திட்டங்களிற்காக வட்டார ரீதியில் மக்கள் பங்களிப்புடன் எதிர் வரும் 3 மாதங்கள் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தயார் செய்யப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு