10 லட்சம் ரூபாய் பெறுமதியில் புதிய வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பம். எதிா்பாா்ப்புடன் இருக்கும் வடக்கு மக்கள்..

ஆசிரியர் - Editor I
10 லட்சம் ரூபாய் பெறுமதியில் புதிய வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பம். எதிா்பாா்ப்புடன் இருக்கும் வடக்கு மக்கள்..

ஒவ்வொரு வீடும் 550 சதுர அடி பரப்பளவில் பயனாளிகளால் கட்டப்படும் வீடுகளாகவும், செங்கல், சீமெந்தினாலான இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை, சமையலறை மற்றும் கழிவறையை உள்ளடக்கியதாகவும், ஓட்டினால் ஆன கூரைகளாகவும் அமைக்கப்படவுள்ளன. 

கலாசாரத்துக்கு அமைவானதாக காணப்படுகின்றன. இதேவேளை யுத்தம் முடிந்த கையோடு கூட்டமைப்புத்தலைவர் மகிந்த அரசாங்கத்திடம்  யுத்தத்தில் அழிவடைந்த சிதைவடைந்த மக்களுக்காக வீடுகளை அமைக்க உதவுமாறு மகிந்தா அரசிடம் கோரிய போது அப்போதய பொருளாதார அபிவிருத்திஅமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ 

நம்மிடம் காசு இல்லை என்று எள்ளளவாக கை விரித்தமையும் அப்போது ஆட்சி பங்காளி தமிழமைச்சர் கள் வாய் மூடு மெளனியாக இருந்தமையும் பின்னர் அட்சி மாற்றத்துடன் அதற்கு வழி கோலியபோது சுவாமிநாதன் இரும்புக்கூண்டு போன்ற வீட்டை எமது சுற்றுச்சூழலுக்கும் காலநிலைக்கும் கலாச்சாரத்துக்கும் உவப்பில்லாதவகையில் 

அமைக்கமுயன்று தடுக்கப்பட்டமையும் இன்னொரு தமிழமைச்சர் தமது எவலாளிகள் மூலம் அரசியல்கால்பதிக்கும் சந்தர்ப்பமாக பயன்படுத்த முயன்று வடக்கு கிழக்கில் ஒருமித்த குரலாக தமிழ்க்குரல்கள் ஒலிப்பதை சிதைக்கும் உள்நோக்குடன் முயன்றமையாலும் காலதாமதமான விடயங்கள் கூட்டமைப்பின் நேர்த்தியான பணி 

முன்னேடுப்புக்கள் மூலம் சரிவர எம் மக்களை சென்றடைவது மகிழ்ச்சியளிக்கின்றது
வீடுகளை அமைப்பதற்கான நிதி மாவட்ட செயலகங்களிற்கு ஒதுக்கப்பட்டு, வேலைத்திட்டங்கள் தைப்பொங்கலுடன்- நாளை- ஆரம்பிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு வீடும் 10 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்படும். பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொண்ட குடும்பங்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், 

வருமானம் குறைந்து குடிசைகளில் வாழும் குடும்பங்கள், கண்ணிவெடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வயோதிபர் மற்றும் இளம் சிறார்களை கொண்ட குடும்பங்கள் என்ற அடிப்படையில் பயனாளிகள் தெரிவில் முன்னுரிமையளிக்கப்படும்.

மாவட்ட செயலாளர்கள் ஊடாகவும், பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான கொடுப்பனவு கட்டம் கட்டமாக வேலைகளின் அடிப்படையில் பயனாளிகளிற்கு வழங்கப்படும்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு