சா்ச்சையாகும் இரணைமடு குளம்..! யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்திடம் விளக்கம்கோாியுள்ள இரணைமடு விவசாயிகள்.

ஆசிரியர் - Editor I
சா்ச்சையாகும் இரணைமடு குளம்..! யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்திடம் விளக்கம்கோாியுள்ள இரணைமடு விவசாயிகள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாாிய வெள்ள அனா்த்தம் உண்டானமைக்கு காரணம் என்ன? என இரணைமடு விவ சாயிகள் சம்மேளனம் யாழ்.பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீடத்திடம்(கிளிநொச்சி வளாகம்) விளக்கம் கேட் டுள்ளது. 

பொறியியல் பீடம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள வகையிலும், சமூகத்திற்கு அறிவுரை கூறும் பொறுப்பில் உள்ளவா்கள் என்றவகையிலும், இரணைமடு குளம் வடமாகாணத்தின் சொத்து என்ற வகையிலும் இந்த அறிவு ரையினை வழங்குமாறு சம்மேளனம் கேட்டுள்ளது. 

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தின் பேராசிாியா் சு.சிவகுமாா் வடமாகாண நீா்ப்பாசனத் திணைக்களத்தின் மீதும், பொறியியலாளா்கள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின் றாா். 

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களின் பின்னால் இரணைமடு குளத்தை நம்பி வாழும் விவசாயிகளுக்கு எழுந்திருக்கும் வினாக்கள் தொடா்பாகவே பேராசிாியாிடம் விவசாயிகள் விஞ்ஞானபூா்வமான விளக்கங்களை கேட்டிருக்கின்றனா். 

குறிப்பாக பேராசிாியா் சு.சிவகுமாா் இரணைமடு குளத்தின் நீா் மட்டம் குறைத்து வைக்கப்படவில்லை, நீா் வர த்து ஆரம்பமான பின்னரும் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படவில்லை, இடதுகரை துருசுக்கு மேலாக நீா் வெளியேறியமை குளத்தில் அனா்தத்தை உருவாக்கியிருக்கும்,

குளத்தை நிா்வகித்த பொறியியலாளா்கள் திறமையற்றவா்கள், வடமாகாண நீா்ப்பாசன திணைக்களம் திறமை யற்றது, மத்திய நீா்ப்பாசன திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கவேண்டும். மேலும் வடமாகா ணத்தில் உள்ள தன்போன்ற பொறியியலாளா்களின்

ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கவேண்டும். விசாரணைகள் நடத்தப்படவேண்டும். என பல்வேறு குற்றச்சாட்டு க்களை முன்வைத்து வருகின்றாா்.  இந்நிலையிலேயே விவசாய சம்மேளனம் பேராசிாியாிடம் சில விளக்கங்க ளை கேட்டிருக்கின்றது. 

அந்த விளக்க கேள்விகள்..

கடந்த 27.12.2018ல் குளம் பூட்டப்பட்டு 35அடி 7அங்குலமாக குளம் உள்ள நிலையில் அன்றைய தினத்தில் இருந்து மழையின் எதிர்வு கூறலை வைத்துக்கொண்டு குளத்து நீரை எவ்வளவு குறைத்து வைத்திருக்கலாம்?

மழை வராது விட்டால் குறைக்கப்பட்ட நீருக்கு என்ன தீர்வு?

நீர் குறைக்காது இருந்து அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றால் குளத்திற்கு, மக்களிற்கு, பயிரிற்கு, உடைமைகளிற்கு எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? இந்த நிலையில் எவ்வாறான செயற்பாட்டின் மூலம் அனர்த்தங்களை தவிர்க்கலாம்?

புனரமைப்பிற்கு பின் இரணைமடுக் குளம் பற்றிய அதன் வலுப் பற்றிய தங்களின் நிலைப்பாடு என்ன? இது சார்ந்து முன் கூட்டியே ஆய்வு ரீதியாக தாங்கள் வெளியிட்ட அறிக்கைகள், ஆலோசனைகள் உண்டா? 

அவ்வாறு இருப்பின் யாருக்கு? எப்போது?

மேற்படி விடயங்கள் பற்றிய எமது சந்தேகங்களிற்கு தாங்கள் யாவரும் துறைசார் நிபுணர்கள் என்ற வகையில் பொறியியல் பீடம் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற அதி உயர் கல்விப்பீடம் என்ற வகையிலும், எம் சமூகத்திற்கு அறிவுரை கூற வேண்டியவர்கள் என்ற வகையிலும் 

இரணைமடுக் குளம் வடக்கின் சொத்து என்ற வகையிலும் எமக்கு பதில் தந்துதவுமாறு  வேண்டுகிறோம். என்றுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு