வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட் பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்துங்கள்.. சீற்றமடையும் புதிய ஆளுநர்.

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட் பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்துங்கள்.. சீற்றமடையும் புதிய ஆளுநர்.

வடகிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள், மற்றும் பௌத்த மயமாக்கலை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கேட்டுள்ளார். 

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

வடக்குஇ கிழக்கு உட்பட தமிழ் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது பௌத்தத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமானது எனவும் 

இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருப்பவர்களை மகாநாயக்கர்களின் ஆசியுடன் கண்டுபிடிக்க முடியும் என நிச்சயம் நம்புவதாகவும் ஒரு தமிழனாக மாத்திரம் 

இதையிட்டு கவலை கொள்ளவில்லை எனவும் ஒரு ஆளுனராக பௌத்த தத்துவத்தை மதிக்கின்ற ஒருவராகவும் இது சரியானது அல்ல என தான் நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்ப் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டால் அது நிறுத்தப்பட வேண்டும் 

எனக்குறிப்பட்ட ஆளுனர் நீண்டகாலம் இராணுவத்தினர் தங்கியுள்ள முகாம்கள் போன்ற சிங்களக் குடியிருப்புகளில் தனிப்பட்ட வழிபாட்டு இடங்களை வைத்திருக்க முடியும்  எனவும் அதனை தாம் நிறுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு