வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதியை மறுசீரமைக்க கோரும் பூதன்வயல் மக்கள்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதியை மறுசீரமைக்க கோரும் பூதன்வயல் மக்கள்..


முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவில், மதவளசிங்கன் கிராம அலுவலர் பிரிவிலுள்ள, பூதன்வயல் கிராமத்தில் வீதியொன்று மழைவெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

இது தொடர்பில் கிராமவாசியான க.விஜயகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,

மழை வெள்ளங் காரணமாக சுமார் 300மீற்றர் தூரமான, கணுக்கேணிக் குளத்தின் பிரதான பீலி வீதி மிகவும் மோசமாகப் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் ஐம்பதிற்கும் அதிகமான கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனங்கள் செல்வதில் சிரமம், பாடசாலை மாணவர்கள் சென்றுவருவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதோடு, வீதியில் நீர் தேங்கியிருப்பதால் நோய்த் தொற்றுக்களும் ஏற்படும் அபாயம் உள்ளதெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் கிராமமட்ட பொது அமைப்புகள் போன்றவற்றிற்குத் தெரியப்படுத்தியிருந்தும், எவரும் இதில் கவனம் செலுத்தவில்லை.

எனவே உரியவர்கள் குறித்த வீதியை மறுசீரமைத்து தருமாறு அவர் மேலும் தெரிவித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு