தடை செய்யப்பட்ட மீன்பிடி வடக்கில் தாராளமாக நடக்கிறது. மீனவர் சங்கங்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor
தடை செய்யப்பட்ட மீன்பிடி வடக்கில் தாராளமாக நடக்கிறது. மீனவர் சங்கங்கள் குற்றச்சாட்டு..

வடக்கில் சட்டவிரோத மீன் பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடியில் பலர் ஈடுபட்டு உள்ளனர் எனவும் , அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை எனவும் வடமாகாண மீனவர் இணைய தலைவர் ஆலம் தெரிவித்தார். 

வடமாகாண மீன்பிடி இணையத்தின் ஒன்று கூடல் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை யாழில்.உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தலைமையுரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் , 

சட்டவிரோத மீன் பிடி முறைமையான சுருக்குவலை , வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் , சிலிண்டர் தொழில் என்பன இன்றும் வடக்கில் இடம்பெறுகின்றன. 

குறிப்பாக முல்லைத்தீவு , மன்னார் , பள்ளிமுனை , பள்ளிக்குடா , பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சட்டவிரோத மீன் பிடி முறைமையை பயன்படுத்தியே பலர் தொழில் ஈடுபடுகின்றனர். என மேலும்  தெரிவித்தார். 

Radio
×