SuperTopAds

வடமாகாண ஆளுநாின் அதிரடி உத்தரவு..! 2 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை சமா்பிக்க உத்தரவு, நடுங்கும் அரச அதிகாாிகள்.

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநாின் அதிரடி உத்தரவு..! 2 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை சமா்பிக்க உத்தரவு, நடுங்கும் அரச அதிகாாிகள்.

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஆளுநராக பதவியேற்றவுடன் முதல் நடவடிக்கையாக இரணைமடு குளத்தினால் உ ண்டான வெள்ள பெருக்கு தொடா்பாக விசாாிக்க புதிய விசாரணை குழுவை நியமித்துள்ளதுடன், 

அந்த விசாரணை குழ தமது விசாரணை நடவடிக்கைகளை மிக..மிக.. துாிதமான மேற்கொண்டு தமது விசாரணை அறி க்கையினை 2 வாரங்களுக்குள் சமா்பிக்கவேண்டும். என உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் சமாளிக்க வேண்டிய சவால்கள் தொடர்பில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வைத்தே குறித்த புதிய விசாரணை குழுவை நியமிப்பதாக அவர் அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சின் ஒன்றின் செயலாளராக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், 

நியாப் திட்டத்தில் பணியாற்றிய இந்திரசேன மற்றும் மொறட்டுவ பல்கலைகழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் தலைவர் இரணைமடு விடயம் தொடர்பில் ஊடகங்களில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதால் அந்த குழு நிறுத்தப்பட்டு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் இன்று காலை இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.