யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலம் புனரமைக்கப்படாமலிருந்த 3 வீதிகள் காப்பற் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. மகிழ்ச்சியில் மக்கள்.

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலம் புனரமைக்கப்படாமலிருந்த 3 வீதிகள் காப்பற் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. மகிழ்ச்சியில் மக்கள்.

யாழ்ப்பாணத்தில் மூன்று பிரதான வீதிகள் காப்பற் சாலைகளாக தரமுயர்த்தப்படவிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட தலைமைப் பொறியியலாளர் வி.சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 கிலோமீட்டர் நீளமான காப்பற் சாலை யாழ்ப்பாணம் நகரிலிருந்து பொன்னாலை வரை அமைக்கப்படவுள்ளதாக ஐ.பி.சி தமிழ் செய்திச் சேவையிடம் அவர் கூறினார்.

AB21 யாழ்ப்பாணம்- பொன்னாலை -பருத்தித்துறை சாலை.

AB17 யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் சாலை,

AB39 வழுக்கையாறு-புங்குடுதீவு-குறிகாட்டுவான் சாலை என்பனவே இவ்வாறு காப்பற் சாலைகளாக மாற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

AB21 சாலைக்கு மூவாயிரத்து எழுநூறு மில்லியன் ரூபாவும் AB17 சாலைக்கு மூவாயிரத்து முன்னூறு மில்லியன் ரூபாவும் AB39 சாலைக்கு பதினோராயிரம் மில்லியன் ரூபாவும் மதிப்பிடப்படுளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் வழுக்கையாறு-குறிகட்டுவான் சாலையின் அராலித்துறைக் கடலில் பாரிய கடற்பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் இதனாலேயே 

இந்த சாலையமைப்புத் திட்டத்திற்கென பதினோராயிரம் மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் முதற்கட்டமாக 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படவுள்ள சாலை உலக வங்கியின் நிதி அனுசரணையில் எதிர்வரும் ஓகஸ்ட் 

மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இது யாழ்ப்பாணம் பண்ணையில் ஆரம்பித்து பொன்னாலை வரை நீளும் எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு பிரதான சாலையான AB31 எனப்படும் புலோலி-கொடிகாமம்-கச்சாய் சாலைக்கான பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை

 தெரிந்ததே, இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு பிரதான சாலைகள் காப்பற் சாலைகளாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு