றெஐினோலட் கூரேயை நீக்கவேண்டாம் என கொடி பிடித்தவா்கள், புதிய ஆளுநரை வரவேற்க முன்னால் நின்ற பாிதாபம்..

ஆசிரியர் - Editor I
றெஐினோலட் கூரேயை நீக்கவேண்டாம் என கொடி பிடித்தவா்கள், புதிய ஆளுநரை வரவேற்க முன்னால் நின்ற பாிதாபம்..

வடமாகாண முன்னாள் ஆளுநரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என ஆர்ப்பாட்டம் வைத்தவர்கள் புதிய ஆளுநரை விமான நிலையம். சென்று வரவேற்று மக்களை அவமானப்படுத்தி விட்டனர் என ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

வடக்கு மாகாண ஆளுநரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கடந்த 7ம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் முன்னாள் சிவன் பவுன்டேசன் கணேஸ் வேலாயுதத்தின் ஏற்பாட்டில் ஓர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. அதில் நாமும் பங்கு கொண்டிருந்தோம்.

இருப்பினும் அன்றைய தினமே பிறிதொருவரை ஜனாதிபதி  ஆளுநராக பதவிப் பிரமானம் செய்து வைத்தார். அவ்வாறு புதிதாக பதவி ஏற்ற ஆளுநர் நேற்று தனது கடமையை பொறுப்பேற்க யாழ்ப்பாணம் வந்தார். அவ்வாறு வந்தபோது அவரை சிலர் பலாலி விமான நிலையம் சென்று வரவேற்றனர்.

அவ்வாறு பலாலி விமான நிலையம் சென்று வரவேற்றவர்கள் யாரெனின் குரேயை பதவி நீக்க வேண்டாம் என்ற ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்தவர்களும் அதற்கு தலமை தாங்கியவர்களும் ஓடிச் சென்று வரவேற்றதன் மூலம் அவர்களை நம்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எம்மை 

கேவலப்படுத்தி விட்டதாகவே கருதுகின்றோம் என்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு