யாழ்.குடாநாட்டில் டெங்கு காச்சலின் தாக்கம் அதிகாிப்பு, மத்திய சுகாதார அமைச்சின் குழு யாழ்.வருகை..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் டெங்கு காச்சலின் தாக்கம் அதிகாிப்பு, மத்திய சுகாதார அமைச்சின் குழு யாழ்.வருகை..

யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் டெங்குநோய் தாக்கம் தொடர்பில் ஆய்விற்கு உட்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2018ஆம் ஆண்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டதனையடுத்தே இவ்வாறு குறித்த குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்பு பிரிவின் கீழ் 

உள்ள டெங்கு கட்டுப்பாட்டிற்கான விசேட அதிகாரிகள் குழுவினரே இவ்வாறு வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்துள்ள குழுவினர் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை , தெல்லிப்பளை வைத்தியசாலை 

அதிகாரிகளையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகின்றதோடு டெங்குத் தாக்கம் அதிகரித்துள்ள பிரதேசங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துகின்றனர். அவ்வாறு அதிகமான டெங்குத் தாக்கம் உள்ள பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய அவசிய, 

அவசர பணிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதோடு அவற்றினை முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி நிலமை மற்றும்அதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துகின் றனர். 

கடந்த காலங்களில் மாதாந்தம் 20 தொடக்கம் 30 பேர் இனம் காணப்பட்ட நிலையில் தற்போது நாள் ஒன்றிற்கு 15 முதல் 25 பேர் வரையில் இனம் கானப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு