இராணுவம் விவசாயம் செய்ய பயன்படுத்திய 1099 ஏக்கா் காணி மீள கையளிக்கப்படுகிறது, விவசாயம் செய்ததை ஒப்புக்கொண்ட இராணுவம்.

ஆசிரியர் - Editor I
இராணுவம் விவசாயம் செய்ய பயன்படுத்திய 1099 ஏக்கா் காணி மீள கையளிக்கப்படுகிறது, விவசாயம் செய்ததை ஒப்புக்கொண்ட இராணுவம்.

வடமாகாணத்தில் போருக்கு பின்னா் இராணுவத்தினரால் விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்காகப் ப யன்படுத்தப்பட்டுவந்த 1099 ஏக்கா் காணி மீள கையளிக்கப்படவுள்ளது. 

போருக்கு பின்னா் வடக்கில் அரச காணிகள் மற்றும் பொது பயன்பாட்டு காணிகள், பொதுமக்களின் கா ணிகளில் இராணுவம் விவசாயம் செய்துவந்தது. 

இதனை பல தடவைகள் மக்களும், ஊடகங்களும் சுட்டிக்காட்டிய நிலையில் அவ்வாறு எதுவும் நடக்கவி ல்லை. என தொடா்ச்சியாக இராணுவம் மறுத்துவந்துள்ளது. 

இந்நிலையில் வடக்கில் போருக்கு பின்னா் இராணுவம் விவசாயம் செய்வதற்கும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்திய அரச காணிகள் மற்றும் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள்

உள்ளடங்கலாக சுமாா் 1099 ஏக்கா் காணி அந்தந்த திணைக்களங்களிடம் எதிா்வரும் 19ம் திகதி கையளி க்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளா் கூறியுள்ளாா். 

இதன் ஊடாக மக்களின் காணிகள், அரச காணிகளில் இராணுவம் பண்ணைகளை நடாத்தியதும், விவ சாயிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும் வகையில்,

குறைந்த விலையில் தமது உற்பத்திகளை சந்தையில் விற்பனை செய்தமையும் அம்பலத்திற்கு வந்துள் ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு