SuperTopAds

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவா்களின் எண்ணிக்கையை கேட்கும் சா்வதேச அமைப்புக்கள்..

ஆசிரியர் - Editor I
2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவா்களின் எண்ணிக்கையை கேட்கும் சா்வதேச அமைப்புக்கள்..

இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் இறந்தவா்கள் தொடா்பான தரவுகளை சேகாித்து வழங்குமாறு இரு சா்வதேச நிறுவனங்கள் 10 வருடங்களின் பின்னா் கோாிக்கை விடுத்துள்ளன. 

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு நிரற்படுத்தல் குழு ஆகியவையே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள குழுக்களிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் இறந்தோரின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தலின் மூலம் 

நினைவு சின்ன செயல்முறையை ஏற்படுத்துவதற்கு அளவிடல் முக்கியமானது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்று 10 வருடங்களாகியும் இன்னும் எத்தனைப்பேர் அதில் இறந்தார்கள் என்ற இறுதி தகவல் வெளியாகவில்லை.

இந்தநிலையில் உலகத்தில் எல்லா பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் எதிர்வரும் மாதங்களில் தமது குடும்பத்தினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரிடமும் பேசி, 

இறந்தோரின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளுமாறு மனித உரிமைகள் தரவு நிரற்படுத்தல் குழுவின் பிரதிநிதி பற்றிக் போல் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்த எண்ணிக்கையை சேகரிக்கும் பணிகள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் ஆரம்பித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த தகவல் சேகரிப்பின்போது போரில் இறந்த சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் திரட்டப்படுவதாக பற்றிக் போல் கூறியுள்ளார்.