வடமாகாணத்தில் 2016ம், 2017ம் ஆண்டுகளின் பின்னா் பிறப்பு வீதம் அதிகாிப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் 2016ம், 2017ம் ஆண்டுகளின் பின்னா் பிறப்பு வீதம் அதிகாிப்பு..

வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு  வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் காணப்படுவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. 

கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017ஆம் ஆண்டில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 7ஆயிரத்து 892 குழந்தைகள் பிறந்துள்ளன. 2017ஆம் ஆண்டு 8ஆயிரத்து 152 குழந்தைகள் பிறந்துள்ளன. அதேபோல் வவுனியா மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 572 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 796 குழந்தைகளும் பிறந்துள்ளன. 

அதேவேளை மன்னார் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 833 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 839 குழந்தைகளும் பிறந்துள்ளன. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 498 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 516 குழந்தைகளும் பிறந்துள்ளன. 

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 576 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 880 குழந்தைகளும் பிறந்துள்ளன.  இவ்வாறாக வடமாகாணத்தில் 2016 ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 371 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 182 குழந்தைகளும் பிறந்துள்ளன. 

அதன் பிரகாரம் 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 811 குழந்தைகள் அதிகமாக பிறந்துள்ளன என வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு