பொது இடங்களில் குப்பை கொட்டியபோது மாட்டியவர்களுக்கு தலா 1000 ரூபாய் தண்டம்..

ஆசிரியர் - Editor I
பொது இடங்களில் குப்பை கொட்டியபோது மாட்டியவர்களுக்கு தலா 1000 ரூபாய் தண்டம்..

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் இரவு நேரங்களில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டியவர்கள் மடக்கி பிடி க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தலா 1000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகரசபை ஆணை யாளர் த.ஜெயசீலன் கூறியுள்ளார். 

யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளில் வீட்டுக்கழிவுகள், வர்த்தக நிலைய, உணவாக கழிவுகள், இறைச்சி கடை கழிவுகள் என கழிவுகளை வீதிகளில் வீசப்படுவதனால்  துர்நாற்றம் வீசுவதுடன்  சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதனால் வீதிகளில் பயணிக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டன. 

அது தொடர்பில் மாநகர சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்கி வந்துள்ளனர். அதனால் கடந்த மாதம் இறுதிவார பகுதியில் யாழ்.மாநகர சபை ஊழியர்கள் இரவு வேளைகளில் விசேட வீதி சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வீதிகளில் கழிவுகளை வீசி செல்பவர்களை மடக்கி பிடித்தனர். 

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் இ முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து கழிவுகளை வீதிகளில் வீசியவர்களை மாநகர சபை ஊழியர்கள் மடிக்கி பிடித்திருந்தனர். 

அது தொடர்பில் ஆணையாளரிடம் கேட்டபோது,

வீதிகளில் கழிவுகளை வீசிய குற்றசாட்டில் டிசம்பர் மாத இறுதி வார பகுதியில் 29 பேரை மாநகர சபை ஊழியர்கள் பிடித்தனர். அவர்களில் 26 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதித்தோம். ஏனைய மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்தார். 

இதேவேளை யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் கழிவுகள் வீசப்படும் இடங்கள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு