அதிகளவான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியமைக்காக நோதேண் சென்றல் தனியார் வைத்தியசாலைக்கு விருது..

ஆசிரியர் - Editor I
அதிகளவான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியமைக்காக நோதேண் சென்றல் தனியார் வைத்தியசாலைக்கு விருது..

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தொழில் உருவாக்கத்துக்கான விருதினை நொதேன் சென்றல் வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளது. கடந்த 13 ஆம் திகதி பத்தரமுல்லையிலுள்ள சுகுருபாய மகாநாட்டு மண்டபத்தில் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் 

நடத்திய தேசிய விருது வழங்கும் நிகழ்விலேயே லக் ரெகியா ஹரசர (இலங்கை தொழில்வாய்ப்பு கௌரவிப்பு) விருதினை நொதேன் சென்றல் வைத்தியசாலை பெற்றுக்கொண்டது.

விருதினை நொதேன் சென்றல் வைத்தியசாலையின் சார்பில் அதன் நிர்வாக உத்தியோகத்தர் இரத்தினம் பத்மநாதன் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நீல்பண்டார ஹப்புகினியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் வேலைகள் துறையில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி இலங்கை தொழிற்படையை வினைத்திறன் மிக்கதாக ஈடுபடுத்துவது குறித்து மதிப்பிடப்பட்டது. அதாவது தொழில் உருவாக்கங்களுக்காக நிறுவனம் மேற்கொள்கின்ற 

மகத்தான பணிகளையும் அதன் முகாமைத்துவத்தின் சாதனைகளை மதிப்பிடுவதற்குமாக தொழில்உருவாக்கல் 5 குறிகாட்டிகளின் கீழ் தனியார் தொழில் நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

அதன்படி தொழில்துறையில் யாழ்.மாவட்டத்திலுள்ள நிறுவனங்களை ஆய்வுக்குட்படுத்திய போதே 2018 ஆம் ஆண்டுக்கான கௌரவத்தை நொதேன் சென்றல் வைத்தியசாலை பெற்றுக்கொண்டது.

நொதேன் சென்றல் வைத்தியசாலையில் 350 க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றன நிலையில் தொழில்வாய்ப்பு ஊழியர்களுக்கான நலன்புரி செயற்பாடு மற்றும் ஊழியர்கள் சார்ந்த விடயங்கள் மிக சிறப்பாக இடம்பெறுகின்றமை கண்டறியப்பட்டதால் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு