மருத்துவ கழிவுகளை நோயாளர் காவு வண்டிகளில் கொண்டுசெல்ல தடை..

ஆசிரியர் - Editor I
மருத்துவ கழிவுகளை நோயாளர் காவு வண்டிகளில் கொண்டுசெல்ல தடை..

வடமாகாண வைத்திய சாலைகளின் மருத்துவ கழிவுகளை நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் ஏற்றி அகற்றும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு வடமாகாண சுகாதார அமைச்சு அறிவுத்துள்ளது. 

வடமாகாண வைத்திய சாலைகளில் சேரும் ஊசிகள் (சிறிஞ்) , சிறிய மருந்துக்குப்பிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை அகற்ற நோயாளர் காவு வண்டிகளை வைத்திய சாலைகள் பயன்படுத்தி வந்துள்ளன. 

அதனால் நோயாளர் காவு வண்டியின் சேவை பாதிக்கப்படுவதுடன் , வண்டியின் சுகாதாரமும் பாதிக்கபடுகின்றது. அதனை கருத்தில் கொண்டு நோயாளர் வண்டிகளில் மருத்துவ கழிவுகளை ஏற்றவதை 

உடன் நிறுத்துமாறும் அதற்கு வேறு வண்டிகளை பயன்படுத்த சுகாதார பணிமனைகள் மூலம் நடவடிக்கை செய்து தரப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சு வைத்திய சாலைகளுக்கு அறிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு