கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீ, சபாநாயகர் தலமையிலான கூட்டத்தில் முடிவு..
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 22563 குடும்பங்களுக்கும் இழப்பீ ட்டு தொகை 10 ஆயிரம் ரூபாயை வழங்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய தலமையிலான கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
சபாநாயகர் கருஜயசூரிய தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு வெள்ள பாதிப்புக்கள் குறித்து மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தனர். இத ன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தீர்மானிக்கப் பட்டிருந்த நிலையில் குறித்த இழப்பீட்டுக்கான பயனாளிகள் தெரிவில் இழுபறிகள் இருந்துவந்த நிலையில் வெ ள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22563 குடும்பங்களுக்கும்
அந்த இழப்பீட்டு தொகை 10 ஆயிரம் ரூபாவை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.