SuperTopAds

ஆனையிறவு போா் வெற்றி சின்னம் அமைந்துள்ள காணி பிரதேசசபைக்குாியதாம்..

ஆசிரியர் - Editor I
ஆனையிறவு போா் வெற்றி சின்னம் அமைந்துள்ள காணி பிரதேசசபைக்குாியதாம்..

ஆனையிறவு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் போா் வெற்றி நினைவுச் சின்னம் அமைக்கப்பட் டிருக்கும் காணி பச்சிலைப் பள்ளி பிரதேச சபைக்கு சொந்தமான காணி என பிரதேசசபை தவி சாளா் கூறியுள்ளாா். 

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபைக்கு உட்­பட்ட குறிஞ்­சா­தீ­வுப் பகு­தி­ யில், உப்­ப­ளம் அமைப்பதற்கு குறித்த காணி­யினை தரு­மாறு பிர­தேச செய­ல­கத்­தால் கோரப்­பட்­ டி­ருந்த நிலை­யில், அவற்­றுக்­கான அனு­மதி நீண்­ட­கால குத்­தைக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும், 

அவற்­றுக்­குச் சொந்­த­மான வாடி. வீடு­கள் அமைந்த காணி தற்­போ­தும் இரா­ணு­வத்­தின் பிடி­யில் உள்ளது எனவும் தெரி விக்கப்பட்டது. அவை முன்­னைய காலத்­தில் நெதர்­லாந்து நாட்­ட­வர்­கள் அங்கு வீடு­கள் அமைத்து வெளி­நாட்டு மக்­க­ளுக்கு சுற்­றலா மையா­மாக வைத்­தி­ருந்­த­னா். 

அவை தற்­போது இரா­ணு­வத்­தின் நினைவுச் சின்­னம் உள்ள பகு­தி­யாக உள்­ள­தாகத் தெரி­வித்த தவி­சா­ளர். இந்­தக் காணி­யினை இரா­ணு­வத்­தி­னர் ஒப்­ப­டைத்­தால் அதனை ஒரு சுற்­றுலா மைய­ மாக ஒல்­லாந்­தர் பயன்­ப­டுத்­தி­யது போன்று பயன்­ப­டுத்த முடி­யும் என­வும் தெரி­வித்­தார்.

குறித்த பகு­தி­யில் படை­யி­னரின் கடை அமைத்­துள்­ள­து­டன், நடை­பாதை வியா­பா­ரி­க­ளும் வியா­ பா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். அவை தொடர்­பாக பிர­தேச சபை அனு­ம­தி­கள் பெறப்­பட்­டுள்­ளதா எனக் கேட்­ட­போது இல்லை எனப் பதி­ல­ளித்­தார்.