வடமாகாணத்தை விட்டு வெளியேற மனமில்லாத ஆளுநர் றெஜினோலட் கூரே.. செய்யும் தில்லு முல்லு.
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயை பதவி விலக்கவேண்டாம். எனக்கோரி கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை ஏற்றிய புகையிரதம்
வருகை தந்த நேரத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வட மாகாண தொண்டராசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் என
நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன் போது மீண்டும் றெஜினோல்ட் குரே
வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய ஜனாதிபதிக்கான மனுவை மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம்
கவனயீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் கையளித்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் எமது தாய்மொழியில் எம்மோடு பேசிய றெஜினோல்ட் குரே எமக்கு வேண்டும்
வடக்கின் தெற்கின் உறவின் பாலம் குரேஇ வடக்கு மாகாணத்தில் பல்வேறு சேவையாற்றி றெஜினோல்ட் குரேயின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுங்கள்.
இனவாதம் இல்லாத ஆளுநர் குரே எமக்கு வேண்டும்இ அனைத்து மதங்களையும் சமமாக கருதும் ஆளுநர் குரே எமக்கு வேண்டும்
வடக்கின் கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்த ஆளுநரே எமக்கு வேண்டும் போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை வடக்கில் ஒரு அரசியல்வாதிபோல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் தாம் தொடர்ந்தும் பதவி யில் இருக்கவேண்டும் என்பதற்காக,
வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகளை வைத்து இந்த போராட்டத்தை நடத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
போராட்டத்தில் கலந்து கொண்டு ஆளுநர் பதவியில் நீடித்தால் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என போரா ட்டத்தில் கலந்து கொண்டிருந்த சிலரே முணுமுணுத்துள்ளனர்.