யாழ்.கல்வி வலயத்திற்கு ஒரு வலயக் கல்வி பணிப்பாளரை நியமிக்க வக்கற்ற நிலையில் மாகாண கல்வி திணைக்களம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வி வலயத்திற்கு ஒரு வலயக் கல்வி பணிப்பாளரை நியமிக்க வக்கற்ற நிலையில் மாகாண கல்வி திணைக்களம்..

வடக்கு மாகாணத்தில் உள்ள ஆயிரம் பாடசாலைகளில் 100ற்கும் மேற்பட்ட  பாடசாலைகளையும் வடக்கின் மிகப் புகழ்பூத்த பல பாடசாலைகளையும் யாழ்ப்பாணத்தின் நகர மத்தியில் உள்ள கல்வித் திணைக்களத்திற்கு ஓரு வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்க முடியாத அவல நிலையிலேயே வடக்கு மாகாண கல்வி அமைச்சு கடந்த 10 மாதங்களாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய தெய்வேந்திர்ராஜா கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி ஓய்வு பெற்றுச் சென்றிருந்தார். அவர் ஓய்வு பெறுவதற்கு இரு மாதங்கள் முதலே அந்த இடத்தை நிரப்பும் முயற்சிகள் இடம்பெற்றன. இருப்பினும் குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்றுச் சென்றும் இன்று 10 மாதங்கள் கடந்த நிலையிலும் 

ஓரு வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்க முடியாமல் கல்வி அமைச்சு திணறுகின்றது. இவ்வாறான செயல்பாடுகளே வடக்கு மாகாண கல்வியின் பின்னடைவுகளில் காரணியாகச் செயல்படுவதாக சுட்டிக் காட்டும் கல்வியாளர்கள் குறித்த நியமனத்தை செய்ய முடியாது தடை போடுவதும் சக அதிகாரிகளே எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டுக்கின்றனர். கல்வி கற்கும் மாணவர்களிற்கு 

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கருத்தியல் வேறுபாடுகளை கொண்டிருக்காது அதிபர்களின் கீழ் செயல்பட வேண்டும் எனத் மிணிக்கும் உயர்ந்த அதிகாரிகளான வலய மாகாண மட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் முட்டி மோதலே ஓர் முக்கிய வலயத்திற்கான வலயக் கல்விப் படிப்பாளர் நியமனத்திற்கு தடையாக உள்ளது.

இதனால் முதலில் நீதிமன்றம் சென்ற விடயம் தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் நியமனம் செய்ய முடியாத அவலம் கானப்படுகின்றது. இவ்வாறு கல்வி அறிவு உடையவர்கள் எனவும் கல்வித் ரிணைக்களம் என்றும் கூறி ஓர் சிறிய பிரச்சணைக்கு சுமூகமான தீர்வை எட்ட முடியாதவர்களை நம்பி நாம் எமது நாட்டின் எதர்காலச் சிப்பிகளின் கல்வியை ஒப்படைத்துவிட்டு ஏமாந்து நிக்கின்றோம்.

 என்கின்றனர். இதனால் குறித்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , குறித்த நியமனத்திற்கு முதலில் தேர்முகத் தேர்வு இடம்பெற்றது. அதில் ஓர் விடயம் தொடர்பில் நீதிமன்றம் சென்றது. தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் ஒருவரின் பெயர் நியமனத்திற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அந்த அனுமதி தொடர்பில் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் அனைவருடன் ஓர் சந்திப்பிற்கு ஒழுங்கமைக்க வேண்டி ஆளுநர் திரும்பியுள்ளார். இதனால் குறித்த நியமனம் தாமதமடைவதாக ஏற்றுக் கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு