அதிகாரிகளின் அசமந்த போக்கா அழிவுகளுக்கு காரணம்..? விசாரணை நடாத்த 3 பேர் கொண்ட குழு நியமனம்.
இரணைமடு குளத்தின் வான் கதவுகளை உரிய நேரத்தில் திறக்காமை மற்றும் குளத்தின் நீர் மட்டத்தை உரியவாறு பேணாமை போன்றவற்றினாலேயே அனர்த்தம் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை ஆளுநர் றெஜினோல்ட் கூரே நியமித்துள்ளார்.
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் பெரும் வெள்ள பெருக்கு உருவாகி மக்கள் பலத்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இரணைமடு குளத்தின் வான் கதவுகளை உரிய நேரத்தில் திறக்காமை, குளத்தின் நீர் மட்டத்தை உரியவாறு பேணமை, மக்களுக்கு அனர்த்தம் தொடர்பில் அறிவிக்காமை,
என பல குற்றச்சாட்டுக்கள் பொதுவாக எழுந்துள்ளது. இந்நிலையில் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்துள்ளதுடன், விசாரணை நடத்தப்படவேண்டும். எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை ஆளுநர் றெஜினோல்ட் கூரே நியமித் துள்ளதாக தெரியவருகின்றது. அந்த குழுவில் யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் சு.சிவகுமார், வடமாகாண பிரதி பிரதம செயலாளர்(பொறியியல்) எஸ்.சண்முகநாதன்,
வடமாகாண விவசாய பணிப்பாளர் பி.சிவகுமார் ஆகியோர் உள்ளடங்கியுள்ளதாக தெரியவருகின்றது.