இராணுவத்திடம் 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை வழங்கும் பேச்சு, அதே இடத்தில் மறுதலித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்..
வெள்ள பெருக்கினால் குடிநீர் கிணறுகள் அசுத்தமடைந்திருக்கும் நிலையில் மக்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக் கொள்ள 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை இராணுவத்திடம் வழங்குவதாக கூறப்பட்ட கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மறுதலித்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழையினாலும், வெள்ள பெருக்கினாலும் மக்களுடைய குடிநீர்க் கிணறுகள் அசுத்தமடைந்திருக்கின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் தலமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மக்களுடைய குடிநீர் கிணறுகள் அசுத்தமடைந்துள்ளது.
அவற்றை உடனடியாக துப்புரவு செய்யவும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவும் 200 நீர் இறைக்கும் இயந் திரங்களை இராணுவத்திற்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்தலித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இங்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதேச சபைகள் உள்ளன.
இராணுவத்திடமே எல்லாவற்றையும் கொடுத்து, இராணுவத்தை வைத்தே எல்லாவற்றையும் செய்வதாக இரு ந்தால் பிரதேச சபைகளை மூடி விடுங்கள். என ஆதங்கப்பட்டதுடன் நீர் இறைக்கும் இயந்திரங்களை பிரதேச சபைகளிடம் வழங்குங்கள் எனவும் கூறினார்.
இதனையடுத்து குறித்த 200 நீர் இறைக்கும் இயந்திரங்களையும் பிரதேச சபைகளிடம் கொடுத்து ஆள் பற்றாக்குறை இருப்பின் இராணுவத்தின் உதவியை நாடலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.