கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளம், 3 ஆயிரம் மில்லியன் இழப்பு..
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் சுமார் 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இரு மாவட்ட செயலகங்களினதும் உத்தியோகபூர்வ தகவல்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
நேற்றைய சந்திப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள், அவற்றை சீரசெய்வது தொடர்பில் ஆராயப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், சுகாதார அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர்,
நீர்வழங்கல் வடிவாலமைப்பு அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன்போது இரண்டு மாவட்டங்களிலும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் உத்தேச மதிப்பாக சுமார் 3இ000 மில்லியன் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
இந்த பாதிப்புக்களை சீர்செய்ய தேவையான நிதியைஇ வரவு செலவு திட்டத்தின் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும்இ உடனடித் தேவைகள்இ சமைத்த உணவுகள் என்பவற்றிற்கான நிவாரண நிதியை அவசர தேவையின் அடிப்படையில்
விடுவிக்கலாமென அமைச்சு செயலாளர் குறிப்பிட்டார். இரண்டு மாவட்டங்கிளிலும் முதன்மை தேவையாக கூரைத்தகடுகள், நில விரிப்புக்கள், மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான சரியான விபரத்தை அதிகாரிகளால் இதுவரை திரட்ட முடியவில்லை. இன்று மாலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முழுமையான விபரத்தை வழங்க முடியுமென
அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை கடந்தவாரம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துவ பண்டார கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தபோது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வெள்ள பாதிப்பு விபரம் குறித்து
இரண்டு மாவட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் விளக்கமளித்தனர். இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மிக துல்லியமாக தமது மாவட்ட பாதிப்புஇ மீட்பு பணி விபரங்களை விளக்கமளித்தார். எனினும் கிளிநொச்சி மாவட்ட நிலவரம்
குறித்து அவ்வளவு துல்லியமான விளக்கமளிப்பு இடம்பெற்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.