வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிரதமர்.. அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு கொழும்பு பயணமானார்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிரதமர்.. அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு கொழும்பு பயணமானார்..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை உடன் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சியில் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்கள், கால்நடைகள், விவசாய அழிவுகள் போன்றவற்றின் மதிப்பீடு நிறைவடைந்ததும் 25 லட்சம் வரை காப்பீட வழங்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெருமளவு பாதிப்புக்களை மக்கள் எதிர்கொண்டிருந்தனர். இது தொடர்பாக ஆராய்வதற்காக இ ன்று காலை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கிளிநொச்சிக்கு வந்திருந்தார். 

இதன்போது அனர்த்த பாதிப்புக்கள் குறித்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மேற்படி உத்தரவினை பிறப்பித்திருக்கின்றார். இதன்போது மேலும் அங்கு பேசப்பட்ட விடயங்களாவன, 

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வீதிகள் தொடர்பில் மதிப்பீடு செய்து அவற்றை புனரமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் முன்னெடுக்கவேண்டும். 

அதற்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். சுகாதார நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் சுகாதாரப் பிரிவினரும் உள்ளூராட்சி சபைகளும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 கிணறுகளைச் சீரமைக்க கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடன்கள் மற்றும் சிறு முயற்சிகளுக்கான கடன்களை மறுசீரமைக்குமாறும்  வங்கிகளுக்கு பணித்துள்ளார்.

அத்துடன்இ நாளாந்தம் அறவிடப்படும் கடன் கொடுப்பனவுகள் மற்றும் கடன் திட்டங்களுக்குள் வராத மேலதிகப் பற்றுகளை மீளச் செலுத்தும் காலத்தை ஒரு மாதத்துக்கு நீடிக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்த நடைமுறைகள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை பிரதேச செயலர் ஊடாகப் அத்தாட்சிப்படுத்திப் பெற்றுக்கொள்ளுமாறும் வங்கிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

விவசாயக் கடன்கள் மற்றும் சிறு முயற்சிகளுக்கான கடன்களை மறுசீரமைப்பதன் ஊடாக தற்போதுள்ள கடன் மீளச் செலுத்துகைக் காலம் மற்றும் மாதந்தக் கட்டணம் என்பன மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு