வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நுண்கடன் வசூலிக்க பிரதமர் தடைவிதித்தார்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நுண்கடன் வசூலிக்க பிரதமர் தடைவிதித்தார்..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நுண்கடன்களை வசூலிக்க வேண்டாம். என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 1 லட்சத்திற்கு மேலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் விசேட கலந்தாய்வு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நுண்கடன் நிறுவனங்கள் நிதி அறவீடு செய்வதாக கிடைத்த தகவல் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நுண்கடன் வசூலிக்க வேண்டமாம். என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உடனடியாக உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு