கனமழை, வெள்ள அனர்த்தத்தினால் உண்டான பாதிப்புக்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் பிரதமர் தலமையில்..
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல திட்டங்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று பிற்பகல் கிளிநொச்சிக்கு வந்த பிரதமர் உலங்குவானூர்தி மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டிருந்தனர். பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வெள்ள அனர்த்த நிலமைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் குறித்து ஆராய்வதற்கான
கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.