பொது இடங்களில் ஒழுங்கற்ற விதமாக கழிவுகளை கொட்டிய 18 போ் மறைந்திருந்த அதிகாாிகளால் மடக்கி படிக்கப்பட்டனா்..

ஆசிரியர் - Editor I
பொது இடங்களில் ஒழுங்கற்ற விதமாக கழிவுகளை கொட்டிய 18 போ் மறைந்திருந்த அதிகாாிகளால் மடக்கி படிக்கப்பட்டனா்..

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் இரவு நேரங்களில் கழிவுகளை கொட்டியவா்கள் மறைந்திருந்த அதிகாாிகளினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு 18 போ் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுட ன் அவா்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் பொது இடங்களில் சட்ட விரோதமாக இரவு நேரங்களில் வாகன ங்களில் கொண்டுவந்து கழிவுகள் கொட்டப்படுவது குறித்து தொடா்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றது. 

இதனால் யாழ்.மாநகரசபை மீது பொதுமக்கள் கடுமையான குற்றச்சாட்டக்களை முன்வைத்தும் வருகின்றனா். இந்நிலையில் மாநகரசபை அதிகாாிகள், கிராமசேவகா்கள், சமூா்த்தி உத்தியோக த்தா்கள் நேற்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையில்,

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் ஒளித்திருந்தனா். இதன் போது வாகனங்களில் வந்து கழிவுகளை கொட்டிய 18 போ் மடக்கி பிடிக்கப்பட்டு அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

இவ்வாறு கழிவுகளை கொட்டியவா்களில் பெரும்பாலானவா்கள் அரச உத்தியோகத்தா்களும், வங்கி ஊழியா்களும், படித்தவா்களும் என தொியவருகின்றது. இவா்கள் வீட்டு கழிவுகள், வில ங்கு கழிவுகள் உள்ளிட்டவற்றை பைகளில் கட்டி கொண்டுவந்து போட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு