யாழ்.வலிகாமம் வடக்கில் இன்று நடக்கவிருந்த காணி விடுவிப்பு நிறுத்தப்பட்டது. கவலையில் மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலிகாமம் வடக்கில் இன்று நடக்கவிருந்த காணி விடுவிப்பு நிறுத்தப்பட்டது. கவலையில் மக்கள்..

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இரானுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி இன்று புதன்கிழமை விடுவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் அனைத்தும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுமென ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். அதற்கமைய படிப்படியாக காணிகள் விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடராக வலிகாமம் வடக்கில் மயிலிட்டி வடக்கு, தையிட்டி தெற்கு, காங்கேசன்துறை மத்தி, பலாலி வடக்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து மொத்தமாக 40 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.  ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் இன்றையதினம்

காணிகள் விடுவிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது காணிகள் விடுவிக்கப்படுமென எதிர்பார்த்திருந்த மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.  இதே வேளை இன்று 40 ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்படுவாதாக  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் பல ஏக்கர் காணிகளையும் இணைத்து 

விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனாலும் இவ்வாறு  இக் காணிகளை விடுவிக்கும் நிகழ்வில் ஐனாதிபதியும் கலந்து கொள்ள உள்ளதாலேயே இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு