டெங்கு கட்டுப்பாட்டு செயற்றிட்டம் 3 நாட்களுக்கு தீவிரப்படுத்தப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
டெங்கு கட்டுப்பாட்டு செயற்றிட்டம் 3 நாட்களுக்கு தீவிரப்படுத்தப்படுகிறது..

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் தற்போது மீண்டும் டெங்கு காச்சல் தாக்கம் ஏற்படுவதனால இன்று முதல் 3 நாட்களிற்கு அனைத்து வீடுகள் , அலுவலகங்களும் பரிசோதனை க்கு உட்படுத்தப்படவுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, உடுவில், கோப்பாய் உள்ளிட்ட சில பிரிவுகளில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பதனால் குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் விசேட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட 

மாவட்டச் செயலக தீர்மானத்தின் பிரகாரம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றில் இருந்து 3 தினங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.  இதன் போது நுளம்பு பெருக்கத்திற்கெ ஏதுவான பொது இடங்கள் இனங்கானப்பட்டு 

அழிப்பதற்கெ திணைக்கள மட்டத்திலும் அலுவலகங்கள், வீடுகளில் அவ்வாறு சூழல் கானப்படின் வரமையான உரிய சட்ட நடவடிக்கைகளிற்கும் உட்படுத்தப்படும். அதன் பிரகாரம் இன்று நாவாந்துறை, கொய்யாத்தோட்டம், 

வைமன் வீதிகளை அண்டி பிரதேசங்களும் நாளைய தினம் அரியாலை,  நல்லூர் , உள்ளடங்களா ன பகுதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.  அதேநேரம் எஞ்சிய பகுதிகள் மறுநாள் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதே நேரம் மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் 

இந்த மாதம் 130 டெங்கு நோயாளர் இனம்கானப்பட்டுள்ளனர். அவ்வாறு டெங கு நோயாளர் இனம் கானப்பட்ட பகுதிகளிற்கு இன்று முதல் புகை விசுறும் பணியும் இடம்பெறுகின்றது. இதேநேரம் டெங்கு நோயாளார் இனம் காணப்படும் 

பகுதிகள் அதிகமாக தெற்கைச் சேர்ந்தவர்கள் வாடகைக்கு குடியமர்ந்த பகுதிகளாகவும் தெற்கிற்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்களுமே அதிகமாக கானப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு