SuperTopAds

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நிவாரண பணிகள் மேலும் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நிவாரண பணிகள் மேலும் தீவிரம்..

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு முகாம்களிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்கு நட்டஈடு வழங்கும் 

நிகழ்ச்சித்திட்டமொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வட மாகாண ஆளுநருக்கும் மாகாண அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பெருமளவு வெள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அங்குள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் இன்றை ய தினமும்  தொடர்ந்து இடம்பெற்றது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உலர் உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.