உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், சமையல் பொருட்கள் மற்றும் பாத்திரங்களை மக்களுக்கு வழங்குங்கள். ஜனாதிபதி அதிரடி உத்தரவு..
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி யாக 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், உணவு தயாாிப்பதற்கான பொருட்கள் மற்றும் பாத்திரங்களை வழங்குமாறு ஜனாதிப தி உத்தரவு பிறப்பித்திருக்கின்றாா்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு மீண்டும் தமது இருப்பிடங்களில் குடியேறுகின்றபோது உணவுகளை தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் தேசமடைந்த வீடுகளை புனர்நிர்மானம் செய்வதற்கு உதவும் வகையில்
ஆரம்பத் தொகையாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. நட்டங்களை மதிப்பீடு செய்ததன் பின்னர் 250,000 ரூபா வரையில் உதவி வழங்கப்படவுள்ளது. மேலும் வயல் நிலங்கள் முழுமையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது
அக்காணிகளுக்கு ஏக்கர் ஓன்றுக்கு தலா 40 ஆயிரம் நஷ்டஈடாக வழங்கப்படவுள்ளது. அசுத்தம டைந்துள்ள வீடுகள், வியாபரா நிலையங்கள், கிணறுகள் மற்றும் கழிவறைகளை சுத்தப்படுத்துவதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டத்தில்
மாகாணத்தின் அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.