ஒத்திவைக்கப்பட்டது காணி விடுவிப்பு. ஜனாதிபதியின் வடக்கு விஜயத்திற்காகவா என சந்தேகம்..?
வடக்கில் 5 மாவட்டங்களிலும் காணி விடுவிப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மழையைக் காரணம் காட்டி அதை ஒத்திவையுங்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மாவட்டச் செயலகங்களுக்கு அறிவித்துள்ளது.
அடுத்த மாத முற்பகுதில் ஜனாதிபதி வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் அவர் அவற்றைக் கையளிப்பதற்காகவே காணி விடுவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படும் என வடக்கு கிழக்கு அரச தலைவர் செயலணிக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் இராணுவத்தினர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். அதற்கு அமைவாக இன்று ஒழுங்குகளை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்னெடுத்திருந்தனர்.
எனினும் திடீரென ஒத்திவையுங்கள் என நேற்று முன்தினம் ஆளுநர் அலுவலகத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.