கிளிநொச்சி மாவட்டத்தில் 50 வீதமான நெற்செய்கை அழிவு.. விவசாயிகள் தலையில் வீழ்ந்துள்ள போிடி.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் சுமார் 26,560 ஏக்கர் நெற்செ ய்கை அழிவடைந்துள்ளது. இது கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த நெற்செய்கையில் அண்ணள வாக 50 வீதமானது எனவும், இதனால் மாகாணத்தின் நெல் உற்பத்தி வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததுடன், குள ங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்து குளங்களிலிருந்து பெருமளவு நீர் வெளியேற்றப்பட்டது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட தண்ணீர் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பாரிய அழி வுகளை உண்டாக்கியது மட்டுமல்லாமல் நெற்செய்கை
க்கும் பாரிய அழிவுகளை உண்டாக்கியுள்ளது. வடமாகாணத்தில் அதிகளவு நெற்செய்கை மேற் கொள்ளப்படும் மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்டம் முதன்மையானது. இந்நிலையில் இந்த வ ருடம் போதுமான மழைவீழ்ச்சி காணப்பட்டதுடன், குளங்களிலும் நீர் தேங்கியமையால் விவசாயி கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததுடன், தொடர்ச்சியாகச்
சில வருடங்கள் வறட்சியினால் பெரும்போக நெற்செய்கை போதியளவு வெற்றியளிக்காத நிலை யில் சோர்வடைந்திருந்த விவசாயிகளுக்கு புது உத்வேகத்தையும் கொடுத்திருந்தது. இந்நிலையி ல் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் கிளிநொச்சி மாவட் டத்தில் நெற்செய்கை பெரும் அழிவை சந்தித்துள்ள
து. குறிப்பாக மாவட்டத்தின் மொத்த உற்பத்தியில் 50 வீதமானவை பூரணமாக அழிவடைந்துள் ளது. மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவு நெற்செய்கை மேற்கொள்ளப்படும் கரைச்சி மற்றும் கண்டாவளை பகுதிகளில் 90 வீதமான நெற்செய்கை அழிவடைந்திருக்கின்றது. இதனால் வடமாகாணத்தின் நெல் உற்பத்தி வீதம் வீழ்ச்சிய
டையவுள்ளது. போருக்கு பின்னர் ஓரளவு நெல் உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவந்த நிலையில் வடமாகாணம் இந்த வருடம் பெரும்போகத்தில் பாரிய அழிவை சந்தித்துள்ளது. இதேபோல் முல் லைத்தீவு மாவட்டத்திலும் சுமார் 9679 ஏக்கர் நெற்செய்கை கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கி னால் அழிவடைந்திருக்கின்றது.