SuperTopAds

காியாலை நாகபடுவான் குளம் கலிங்கு பாய்கிறது.. 4 கிராமங்களை சோ்ந்த 2700 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு..

ஆசிரியர் - Editor I
காியாலை நாகபடுவான் குளம் கலிங்கு பாய்கிறது.. 4 கிராமங்களை சோ்ந்த 2700 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு..

கிளிநொச்சி- கரியாலை நாகபடுவான் குளம் கலிங்கு பாயும் நிலையில் பல்லவராயன்கட்டு- வேர வில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு, பாலாவி உள் ளிட்ட கிராமங்களில் வாழும் சுமார் 2700 குடும்பங்களை சேர்ந்த மக்கள் எந்த உதவிகளும் இல் லாமல் வெள்ளத்தில் சிக்கியிருக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் சுமார் 400 அடி நீளமான குளத்தின் கலிங்கு வழியாக 1 அடி உயரத்தில் கலிங்கு பாய்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் வேராவில், கிராஞ்சி, வலைப்பாடு, பாலாவி ஆகி ய கிராமங்களுக்கான பிரதான வீதி பல்ல

வராயன்கட்டு- வேராவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மேற்படி 4 கிராமங்களிலும் வாழ்ந்த சுமார் 2700 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருக்கின்றனர். வெள்ளத் தில் சிக்கியுள்ள மக்களுக்கு வெளியிலிருந்து உதவிகளை கொண்டு செல்வதில் சிக்கல்கள் உ ள்ளதாகவும், உள்ளே சிக்கியுள்ள மக்கள்

வெளியே வருவதிலும் சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வெள்ளத்தினால் ப hதிக்கப்பட்ட மேற்படி பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளார். இது குறித்து அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, 4 கிரா மங்களை சேர்ந்த சுமார் 2700 குடும்பங்கள்

வெள்ளத்திற்குள் சிக்கியிருக்கின்றனர். அவர்களுக்கான உணவு மற்றும் இதர வசதிகளை கொ ண்டு செல்வதற்கு வெள்ளம் பாரிய தடையாக உள்ளது. அதேபோல் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களும் அவ்வளவு சுலபமாக வெளியே வரமுடியாத நிலையே காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதிகளை நேரில் சென்று பார்வை

யிட்டிருந்தோம். மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் வெள்ளத்தை கடந்து சென்றே மக்களை சந்திக்க கூடியதாக இருந்தது. அங்கு மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ள து. ஆனாலும் பெருவாரியான மக்கள் தங்களுடைய வீடுகளிலேயே தங்கியிருக்கின்றனர். அவர்க ளுக்கு உணவு மற்றும் சில அத்தியாவசிய

பொருட்கள் உடனடியாக தேவை என்பதை கூறியிருக்கின்றார்கள். அதனடிப்படையில் பூநகரி பிரN தச செயலருடன் தொடர்பு கொண்டு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் சில பொருட்களை உடனடியாக கொண்டு சென்று கொடுக்குமாறு கூறியுள்ளதுடன், நாங்களும் சில உதவிகளை அந் த மக்களுக்கு வழங்குவதற்கான துரித முய

ற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். அதேபோல் கரியாலை நாகபடுவான் குளம் கலிங்கு பாய்ந் து வருகிறது. சுமார் 1 அடி உயரத்திற்கு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றபோதும் காடு கள் வழியாக குளத்திற்கு நீர் வரத்து குறையவில்லை. அதனால் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிக ரிக்கலாம் என்ற அச்சமும் இருக்கின்றது.

மேலும் சோழநிலா குடியிருப்பு, கரக்குன்று, நாச்சிக்குடா, நாவாந்துறை, அன்புபுரம், ராஜபுரம், ஜெ யபுரம் ஆகிய கிராமங்களும் பூரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருக்கின்ற மக்களுக்கும் தேiவான உதவி திட்டங்களை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடு க்கப்பட்டிருக்கின்றது.