கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார் பிரதமர் ரணில்..

ஆசிரியர் - Editor
கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார் பிரதமர் ரணில்..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நாளை மறுதினம் மேற்படி இரு மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார். 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை பல அரசியல் தலைவர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில் நாளை ம றுதினம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மேற்படி இரு மாவட்டங்களுக்கும் நேரில் விஜயம் செய்யவுள்ளார். 

இந்த விஜயத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கும் பிரதமர் அவர்களுக்கான இழப்பீடு மற்றும் உ தவி திட்டங்கள் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Radio
×