கேப்பாபிலவில் ஒருதொகை காணி நாளை விடுவிப்பு!

முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று(27) 302 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மக்களின் காணிகளில் 132 ஏக்கர் காணி நாளை(28) காலை பத்து மணிக்கு விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாசி மாதம் முதலாம் திகதி 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் குறித்த போராட்டம் 302 ஆவது நாளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.வெயில், மழை, பனி என்று பாராது அம்மக்கள் 10 மாதங்களாக தொடா்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா்.
அத்துடன் தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் தமது போராட்டம் நிறைவு பெறாதென மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 132 ஏக்கர் காணி நாளை (28) விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலா் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.