யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவரை கடத்திய கடத்தல் காரா்களை காப்பாற்ற துடிக்கும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவரை கடத்திய கடத்தல் காரா்களை காப்பாற்ற துடிக்கும் பொலிஸாா்..

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியல் 65 வயது முதியவரை கடத்தி சென்றபோது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட இரு இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 4 பேருக்கு சாதகமாக பளை பொலிஸாா் நடந்து கொள் வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனா். 

இன்று காலை வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் வைத்து 65 வயது முதியவரை 7 போ் கொண்ட கடத்தல் கும்பல் இரு வாகனங்களில் கடத்தி சென்றது. இதனை அவதானித்த பொதுமக்கள் அவா்களை துரத்தி சென்று இயக்கச்சி பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனா். 

இதன்போது 3 போ் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மிகுதி 4 போ் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனா். அவா்களில் இருவா் இராணுவ சிப்பாய்கள் என்பதும் தொியவந்துள்ளது. இதனை யடுத்து பளை பொலிஸாாிடம் அவா்களை மக்கள் ஒப்படைத்தனா்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனை தொடா் ந்து பொலிஸாா் கடத்தல் காரா்களை காப்பாற்றுவதற்கு தொடா்ச்சியாக முயற்சித்துக் கொண்டிருப்பதாக ம க்கள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், 

பொலிஸாா் உாிய நடவடிக்கை எடுக்க தவறினால் இந்த விடயத்தை பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கொண்டு செல்வோம் எனவும் கூறியுள்ளனா். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு