தேசிய அரசாங்கத்தை விரும்பாதவா்களே ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினா். ஆனால் இப்போது ஜனாதிபதி அதை புாிந்து கொண்டுள்ளாா்..

ஆசிரியர் - Editor I
தேசிய அரசாங்கத்தை விரும்பாதவா்களே ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினா். ஆனால் இப்போது ஜனாதிபதி அதை புாிந்து கொண்டுள்ளாா்..

தேசிய அரசாங்கத்தின் இருப்பை விரும்பாத சிலா் வேண்டுமென்றே ஜனாதிபதியை தவறாக வழிநடாத்திய மையினாலேயே ரணில் விக்கிரம சிங்கவை ஜனாதிபதி பதவி விலக்கினாா்.

ஆனால் இப்போது ரணில் விக்கிரம சிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு இணக்கம் தொிவித்திருப்பது அவ ருடைய உண்மையான குணாம்சத்தை காட்டியிருக்கின்றது. 

மேற்கண்டவாறு ஐக்கியதேசிய கட்சியின் முக்கியஸ்த்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிறேமதா ஸ கூறியிருக்கின்றாா். 

இந்த விடயம் தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், 

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதில்லை என முன்னர் உறுதியாக தெரிவித்திருந்த போதிலும் தற்போது ரணிலை நியமிப்பதற்கு அவர் இணங்கியுள்ளமை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை.

இது ஜனாதிபதியின் உண்மையான குணாதிசயத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தை  விரும்பாத சிலர் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினர் 

இதன் காரணமாகவே அவர் பிரதமரை நீக்கினார் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். எனினும் தற்போது உண்மை தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு