SuperTopAds

முல்லைத்தீவை நோக்கி கொண்டு வரப்பட்ட யானைகள்!

ஆசிரியர் - Editor II
முல்லைத்தீவை நோக்கி கொண்டு வரப்பட்ட யானைகள்!

முல்லைத்தீவு நோக்கி இரண்டு யானைகள் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.

இன்று பிற்பகல் வவுனியா பகுதியை தாண்டி இரண்டு யானைகள் முல்லைத்தீவை நோக்கி கொண்டுவரப்பட்டதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் விவசாயிகளின் வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளை யானைகள் தொடர்ச்சியாக அழித்து வருகின்ற நிலையில் குறித்த யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.