முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால்- மாத்தளன்- சாலை வீதியின் பகுதியளவிலான மறுசீரமைப்பு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன..
முல்லைத்தீவு மாவட்டத்தின், இரட்டைவாய்க்கால், மாத்தளன், சாலை வீதியின் பகுதியளவிலான மறுசீரமைப்பு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
விசேட நிதி ஒதுக்கீடு ஒன்றினூடாகவே குறித்த வீதியின் பகுதியளவிலான மறுசீரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு வேலைகளை
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
முள்ளிவாய்க்கால் மேற்கு, வலைஞன்மடம், அம்பலவன் பொக்கணை, புதுமாத்தளன் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமல்லாது அந்தப் பகுதிகளோடு தொடர்புடைய அனைவரும் பாவிக்கும் மிக முக்கியமான வீதியாகும்.
மேலும்இறுதி யுத்தத்தின்போது, பல இலட்சக்கணக்கான மக்கள் பாவித்த இந்த வீதியானது, தற்போது குன்றுங்குழியுமாக, பாவிக்கமுடியாத நிலையில் காணப்படுகின்றது.
அத்துடன் இவ்வீதியை செப்பனிடும் வகையில் பல தடவைகள் இப்பகுதிப் பொது அமைப்புக்களாலும், மக்களாலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் இன்றுவரையில் முழுமையாகச் சீர்செய்யப்படவில்லை.
இந் நிலையில் கடந்தாண்டு தங்களுடைய சிபார்சுக்கென ஒதுக்கப்பட்டதில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும், ஆ.புவனேசுவரன் ஆகியோாினது தலா 50,00000.00(ஐந்து மில்லியன்) ஒதுக்கீட்டை இவ் வீதிக்கு ஒதுக்கி
சுமார் 01 கிலோமீற்றர் துரமான வீதிக்கு தார் மூலம் செப்பனிடப்பட்டிருந்தது. மேலும் இவ்வீதி வீசேட திட்டம் ஒன்றில் உள்வாங்கப்பட்டு மறுசீரமைப்பு வேலைகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டும் பின்னர் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில்,
2019ஆம் ஆண்டு இவ்வீதி புதிய ஒரு திட்டத்தில் உள்வாங்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட செயலரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தும் இவ்வீதி பாவிக்கவே முடியாத நிலையில் இருப்பதைக் கருத்தில்கொண்டு, விசேடமாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் உரியவர்களோடு, முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் ரவிகரன் தொடர்புகொண்டு
கலந்துரையாடியதன் பேரில் உரூபாய் 20,00000.00 (இரண்டு மில்லியன்) ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 300மீற்றர் வரையான குறுகிய தூர அளவிலான வீதியின் மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்மாகி நடைபெறுகின்றன.
இருந்தும் 2019ஆம் ஆண்டு முழுமையாக இவ்வீதியை மறுசீரமைப்புச் செய்து தரவேண்டுமென்ற கோரிக்கையை உரியவர்களிடத்தே முன்வைத்திருப்பதாக ரவிகரன் தெரிவித்துள்ளாா்.