யாழ்.மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம், ஈ.பி.டி.பி எதிர்ப்பு.

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம், ஈ.பி.டி.பி எதிர்ப்பு.

யாழ் மாநகரத்தின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய 2019 ஆம் ஆண்டுக்கான  பாதீடானது வாக்கெடுப்பு இன்றி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் 3ஆவது விசேட பொதுக்கூட்டமானது 2018.12.12 காலை 9.30 மணிக்கு மாநகர சபா மண்டபத்தில் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் கடந்த அமர்வில் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், திருத்தங்களுடன் சபையில் முதல்வரால் பாதீடு முன்வைக்கப்பட்டது. 

இன்றய தினம் முன்வைக்கப்பட்ட பாதீட்டில் சில திருத்தங்கள் மற்றும் வகை மாற்றங்கள் உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டது. குறித்த வகை மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 

முற்றுமுழுதான ஜனநாயக முறையில் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்பட்டபொழுது  வாக்கெடுப்பு இன்றி மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய 2019 ஆம் ஆண்டுக்கான  

இப் பாதீடானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களினதும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

இவ்வாறு 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடானது  பெரும்பான்மை உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டு யாழ் மாநகரசபையின் 3ஆவது விசேட கூட்டம் 1.15 மணிக்கு நிறைவுற்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு