யாழ்.மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரவு..

யாழ்.மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீட்டில் மக்கன் நல திட்டங்கள் புறந்தள்ளப்பட்டு உறுப்பினர்க ளின் நலன்கள் மேம்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றை மாற்றியமைத்து மக்கள் நல திட்டங்களை மையப்ப டுத்திய பாதீட்தை தமிழ்தேசிய மக்கள் முன்னணியே கொண்டுவந்துள்ளதாக அக்கட்சியின் மாநகரசபை உறுப்பி னர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இன்று மாலை யாழ்.ஊடாக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட யாழ்.மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாநகர சபையில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முதலில் கடுமையாக எதிர்த்த பின்னர் ஏன் இறுதியில் அந்த வரவு செலவு திட்டத்தை ஆதரித்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி சபையின் வரவு செலவு திட்டம் என்ற போர்வையில் 4 பக்க அறிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்தார்கள். இந்த வரவு செலவு திட்டம் உரிய நியமங்களை கொண்டிருக்கவில்லை அது வருமான செலவு கூற்று என்று கூறி தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்தது. 

இதன் பின்னர் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நாங்கள் கூறியது போல் நியமங்களுக்கு உள்ளானது என்று கூறாவிட்டாலும் ஒரு விரிவான வரவு செலவு திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீதும் எமது விவாதங்களை நடத்தினோம். 

சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் சபையின் சுய வருமாமானமாக 911 மில்லியன் ரூபா காட்டப்பட்டது. ஆனால் எங்களுடைய நியாயங்களின் அடிப்படையில் நிச்சயமற்ற உறுதிப்பாடான வருமானங்கள் சபைக்கு கிடைக்காது என்பதை சபையில் சுட்டிக்காட்டினோம். 

அதனடிப்படையில் 562 மில்லியன் ரூபா சபைக்கு சுய வருமானமாக கிடைக்கு என்ற உறுதிப்பாட்டை சபைக்கு எடுத்துக் கூறினோம். எனவே 562 மில்லியன் ரூபா வருமானத்தில் செயற்படும் வகையிலான வரவு செலவு திட்டத்தினை சபையில் சமர்ப்பிக்குமாறு கோரினோம்.

இதுமட்டுமல்லாமல் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 911 மில்லியன் ரூபா வரவு செலவு திட்டத்தில் மிகமிக ஆடம்பரமான செலவாக உறுப்பினர்களின் நலனோன்புக்காக 47.37 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள இது வரவு செலவு திட்டத்தில் 5 இல் இரண்டு வீதமானது. அதே நேரம் மக்களின் தேவைகளுக்காக 20.2 வீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது

 எனவே இது மக்களுக்கு நன்மை செய்யும் வரவு செலவு திட்டம் இல்லாமல் உறுப்பினர்களின் நன்மை கருதியும் நிர்வாக செலவுகள் அதிகமாக காட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தி தொடர்ந்தும் வரவு செலவு திட்டதை எதிர்த்தோம். 

மீண்டும் இன்று புதன்கிழமை சபைக்கு 562 மில்லியன் ரூபா வருமானத்துடன் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 84 மில்லியன் ரூபா 14.9 வீதம் மக்களுடைய நலனுக்காக ஒதுக்கப்பட்டது. இதற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்து மேலும் மக்களுடைய தேவைகளை பூர்தி செய்யக் கூடாய வரவு செலவு திட்டமாக மாற்ற வேண்டும் என்று கோரியது. 

இதன்படி பல மாற்றங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்மொழிந்து மாற்றம் செய்து மக்களுக்கான வரவு செலவு திட்டமாக மாற்றியது. ஊண்மையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் உருவாக்கப்பட்ட மக்களுக்கான வரவு செலவு திட்டம் என்றதினாலேயே நாங்கள் அதனை ஆதரித்தோம். 

இதன் ஊடாக 131 மில்லியன் கிட்டத்தட்ட சபைக்கு கிடைக்கும் 23.3 வீது சுய வருமானத்தில் இருந்து கிடைக்கும் வருமானங்களும் மக்களுக்கு கிடைக்கும். 

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலுவு திட்டத்தில் ஊழியர்களுக்காக இருந்த 47.37 மில்லியன் ரூபா குறைக்கப்பட்டு 1.5 மில்லியன் ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் வரவு செலவு திட்டம் கொண்டுவரப்பட்டது போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி 4 காரணங்களுக்காக எதிர்த்தது. குறிப்பாக மிகைப்படுத்தப்பட்ட சுயவருமானம் மக்கள் நலன்களை புறம்தள்ளி உறுப்பினர்களுக்கான நலன் பேணப்பட்டமை சாதாரண கடமைகளை ஆற்றுகின்றதான உள்ளமை புதிய பொறிமுறை உருவாக்க முடியாத வரவு செலவு திட்டமாக காணப்படதினாலேயே நாங்கள் எதிர்த்தோம். 

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த வரவு செலவு திட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்மொழிந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுஇ மக்கள் நலன் மேம்மட்டதினாலேயே நாங்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கினோம். 

மேலும் யாழ்.நகர மக்களின் பெரும் பிரச்சினையாக உள்ள திண்மக் கழிவகற்றலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரனினால் கொண்டுவரப்பட்ட புதிய பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது இவ் வரவு செலவு திட்டத்தில் உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு