ஈ.பி.டி.பி உறுப்பினர் உண்மையை மறைத்து பேசுகிறார், த.தே.கூட்டமைப்பு உறுப்பினருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்.

ஆசிரியர் - Editor I
ஈ.பி.டி.பி உறுப்பினர் உண்மையை மறைத்து பேசுகிறார், த.தே.கூட்டமைப்பு உறுப்பினருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்.

யாழ்.மாநகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதத்தின்போது த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ந.லோகதயாளனுக்கும், ஈ.பி.டி.பி உறுப்பினர் மு.றெமீடியஸிற்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம் பெற்றுள்ளது. 

பாதீடு தொடர்பான விவாத்த்தில் மாநகர சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் பலர் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள நிலையில் கூட்டமைப்பின் எந்த உறுப்பினரும் இந்தச் சபைக்கு எந்த நிதியினையும் கொண்டு வரவில்லை.

 ஆனால் சில நாட்கள் அமைச்சராக இருந்த எமது கட்சி அமைச்சர் பல நூறுபேருக்கு போருனால் பாதித்த அதிக நிதி உதவிகளை மேற்கொண்டார். 

ஆனால் த.தே.கூட்டமைப்பின் செயலினாலேயே இன்று அமைச்சர் நிலை கேள்விக்கு உட்பட்டு நிக்கின்றது. என உரையாற்றினார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.லோகதயாளன் இ

இங்கே ஈ.பீ.டீ.பியின் உறுப்பினர் தவறான கருத்துக்களை பதிவு செய்ய முற்படுகின்றார். அதாவது கூட்டமைப்பின் எந்த உறுப்பினரும் எந்தப் பணமும் சபைக்கு கொண்டு வரவில்லை என்று ஈ.பீ.டீ.பி உறுப்பினர் தெரிவித்த கருத்து தவறானது. 

நான் எனது முயற்சியில் மட்டும் 2 மில்லியன் ரூபா கொண்டுவந்திருந்தேன். எனத் தெரிவித்ததோடு அமைச்சர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக உதவினார் எனத் தெரிவித்தமையும் சுத்த தவறான விடயம்

ஏனெனில் 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்போதைய அமைச்சர் டி.எம்சுவாமிநாதனால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிதியை அவசராமாக கொண்டு வரப்பட்ட அமைச்சர் தூக்கி கொடுத்தார் 

இவ்வாறு 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காக நிதி ஒதுக்கியபோது அதனை தற்போது தூக்கிகொடுத்த அமைச்சர் எதிர்த்து வாக்களித்திருந்தார்.

இந்த உண்மையை மறைக்க முயலக்கூடாது அதனால் அமைச்சர் வழங்கினார் என்பது சுத்தப் பொய் என பதிலளித்து உரையாற்றினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு