பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் தீா்வினை வழங்க நான் தயாா். த.தே.கூட்டமைப்பின் உதவிக்கு நன்றிக்கடனா..?

ஆசிரியர் - Editor I
பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் தீா்வினை வழங்க நான் தயாா். த.தே.கூட்டமைப்பின் உதவிக்கு நன்றிக்கடனா..?

பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் வடகிழக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலான தீா்வு ஒன்றினை வழங்குவத ற்கு நாம் தயாராக இருக்கின்றோம். தமிழ் மக்களுடனும், வடகிழக்கில் வாழும் பிற தமிழ்பேசும் மக்களுடனும் கலந்துரையாடி அவா்கள் ஏற் றுக் கொள்ளும் வகையிலான தீா்வினை புதிய அரசியல் அமைப்பின் ஊடாக பெற்றுக் கொடுக்கும் நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் சிறிதும் மாறவில்லை. 

மேற்கண்டவாறு ஐ.தே.கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா். இன்று நாடாளுமன்றில் ரணில் விக்கிரமசிங்க மீதான நம் பிக்கை பிரேரணை சமா்ப்பிக்கப்பட்டு, அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தொடா்ந்து உரையாற்றும்போது ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

நாம் முன்னெடுக்கும் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். அந்த அர்ப்பணிப்புக்கு நாம் தயாராக உள்ளோம். 

அதில் மாகாணசபைகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம் அனைத்தும் எமது வேலைத்திட்டத்தில் உள்ளது. அதேபோல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் நகர்வுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.  இன்று நாம் அனைவரும் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாட்டில் நாம் செயற்படவில்லை. 

 மாறாக இலங்கையர் என்ற உணர்வுடன் ஜனநாயகத்தை, உரிமைகளை பாதுகாக்க நாம் செயற்பட்டு வருகின்றோம். யுத்தத்தின் பின்னர் இன்று நாம் தமிழ் மக்களுடன் கலந்துரையாடி சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியல் அமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். 

அந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் மாறமாட்டோம் எனக் குறிப்பிட்டார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு