பாராளுமன்ற மோதல் குறித்து ஆராய்வதற்கான குழு இன்று கூடுகிறது..

ஆசிரியர் - Editor I
பாராளுமன்ற மோதல் குறித்து ஆராய்வதற்கான குழு இன்று கூடுகிறது..

அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல்கள்; குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று முதற்தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக் குழுவில், சமல் ராஜபக்ஸ, ரஞ்சித் மத்தும பண்டார, சந்திரசிறி கஜதீர, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால், பாராளுமன்றத்தின் சொத்துக்கள் பல சேதமடைந்ததுடன் சுமார் 260,000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் இன்று இந்த விடயம் குறித்து கூடி ஆராயப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு