SuperTopAds

பன்னாட்டு மனித உாிமைகள் தினத்தில் காணாமல்போனவா்களை கேட்டு உறவினா்கள் முல்லைத்தீவில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
பன்னாட்டு மனித உாிமைகள் தினத்தில் காணாமல்போனவா்களை கேட்டு உறவினா்கள் முல்லைத்தீவில் போராட்டம்..

வடக்கில் உள்ள ஜந்து மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனவீ்ர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையிலி, சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று ஒன்று கூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு நகரில் உள்ள இராயப்பர் தேவாயலத்தின் முன்றலில் இருந்து ஆரம்பமான கவனவீர்ப்பு ஊர்வலம், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் சென்றடைந்தது.

” வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், சர்வதேசமே பதில்கூறு, சிறைகளில் வாடும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்,சர்வதேசமே திரும்பிப்பார், ஆட்சிக்கு அடிபடும் அரசு எமக்கு என்ன பதில் கூறும்” என்ற வசாகங்கள் எழுதிய பாதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


படங்கள் நன்றி- ஊடகவியலாளா் குமணன்..